பகுதிநேர ரேஷன் கடை திறப்பு


பகுதிநேர ரேஷன் கடை திறப்பு
x
தினத்தந்தி 15 May 2022 9:11 PM IST (Updated: 15 May 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

ராசாத்துபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்விஷாரம் ராசாத்துபுரம் பகுதியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரேஷன் கடையை திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். 

இதில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, உதவி கலெக்டர் பூங்கொடி, மேல்விஷாரம் நகரமன்றத் தலைவர் எஸ்.டி.முகமது அமீன், ஆற்காடு நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாண்டுரங்கன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story