இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2022 9:12 PM IST (Updated: 15 May 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை இருதரப்பினர் மோதல் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
இட்டமொழி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 60). இட்டமொழி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் மகன் இசக்கிமுத்து (28). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் செந்தூர்பாண்டி வீட்டின் அருகில் உள்ள அரவிந்த் என்பவரது வீட்டின் ஜன்னலையும், அவரது மோட்டார் சைக்கிளையும் சிலர் உடைத்தனர். இதை தட்டிக் கேட்ட செந்தூர்பாண்டியையும் அந்த நபர்கள் தாக்கினர்.
இதுகுறித்து செந்தூர்பாண்டி அளித்த புகாரின்பேரில், இட்டமொழி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம், சதீஷ், சுரேந்தர், இளையராஜா, அர்ஜூன், ஜீவா ஆகிய 6 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேந்தர், இளையராஜா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதேபோன்று இசக்கிமுத்துவின் வீட்டின் அருகில் அருகில் மின்பெட்டி, தெருக்குழாய் போன்றவற்றை சிலர் அடித்து சேதப்படுத்தி, இசக்கிமுத்துவுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். 
இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், இட்டமொழியைச் சேர்ந்த சக்திவேல், அருண், வருண், மணிகண்டன், சுதாகர், அரவிந்த், மற்றொரு அருண் ஆகிய  7 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story