எலி மருந்தை தின்று ெபண் தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே எலி மருந்தை தின்று ெபண் தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகில் உள்ள இடையம்பட்டி காந்திரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன், ஏலகிரிமலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இவர், திருநெல்வேலியைச் சேர்ந்த ரேவதியை திருமணம் செய்தார். அவர், குடும்பப் பிரச்சினையால் கணவரை விட்டு பிரிந்து ெசன்று விட்டார். இதனால் குணசேகரன் 2 வதாக உறவினர் பெண் புவியரசியை (வயது 19) 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
கடந்தசில நாட்களாக புவியரசி உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு உடல் நலம் மோசமாகியதால் எலி மருந்தை (விஷம்) தின்று விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்க சிகிச்சை பலனின்றி நேற்று காலை புவியரசி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story