நின்ற கார் மீது லாரி மோதி மெக்கானிக் சாவு


நின்ற கார் மீது லாரி மோதி மெக்கானிக் சாவு
x
தினத்தந்தி 15 May 2022 9:20 PM IST (Updated: 15 May 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை:
நெல்லை அருகே நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாமி கும்பிட வந்தனர்
ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). மெக்கானிக். சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் (30), சுப்பு (50), கார்த்திக் ராஜா (38). இவர்கள் 4 பேரும் ஒரு காரில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தனர்.
காரை முருகேசன் ஓட்டினார். இந்த நிலையில் அவர்கள் நெல்லை அருகே தாழையூத்து நியூ காலனி அருகே சாலையோரம் காரை நிறுத்தி ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். முருகேசனும், கார்த்திக் ராஜாவும் காரை விட்டு இறங்கி வெளியே நின்று கொண்டிருந்தனர். சுப்புவும், லோகநாதனும் காரின் உள்ளே அமர்ந்து இருந்தனர்.

மெக்கானிக் பரிதாப சாவு
அப்போது அந்த பகுதியில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சுப்பு மற்றும் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் முக்காணியைச் சேர்ந்த முத்துமாலை (26) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த சுப்பு, முத்துமாலை ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story