காணாமல் போன அரிய வகை கிளி சமூக வலைத்தளங்கள் உதவியால் மீட்பு


காணாமல் போன அரிய வகை கிளி சமூக வலைத்தளங்கள் உதவியால் மீட்பு
x
தினத்தந்தி 15 May 2022 9:31 PM IST (Updated: 15 May 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

காணாமல் போன அரிய வகை கிளி சமூக வலைத்தளங்கள் உதவியால் மீட்பு

போடிப்பட்டி:
கிளிக்கு ரெக்க முளைச்சிடுத்து... ஆத்த விட்டு பறந்து போயிடுத்து... என்ற திரைப்பட வாசகம் மிகவும் பிரபலமானது. அதுபோல உடுமலை பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. உடுமலையையடுத்த எஸ்.வி. புரம் பகுதியில் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட ஒருவர் ஒரு ஜோடி அரிய வகை சன் கானுர் ரக கிளிகளை வளர்த்து வந்தார். ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை மதிப்பு கொண்ட இந்த கிளிகள் பார்ப்பதற்கு அழகிய தோற்றம் கொண்டது. இதில் தாரா என்று பெயர் சூட்டி செல்லமாக வளர்த்த ஒரு கிளி கைகளை நீட்டினால் பறந்து வந்து கைகளில் அமரும். அத்துடன் விசில் அடித்தால் பதிலுக்கு விசில் மூலம் பதில் சொல்லும். குடும்ப உறுப்பினர் போல செல்லமாக வளர்க்கப்பட்ட இந்த கிளி நேற்று கூண்டின் கம்பிகளை அலகுகளால் வளைத்து இடைவெளி ஏற்படுத்தி பறந்து விட்டது. 
இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் அக்கம். பக்கம் தேடியும் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் கிளியின் படம் மற்றும் பெயருடன் பகிர்ந்து கொண்டனர். சில மணி நேரங்களில் இதற்கு பலன் கிடைத்தது. அருகிலுள்ள குடியிருப்பில் உள்ள தென்னை மரத்தில் அமர்ந்திருந்த தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற அதன் உரிமையாளர் அழைத்ததும் அந்த அரிய வகைக்கிளி அழகாக பறந்து வந்து அவர் கைகளில் அமர்ந்து கொண்டது. கூட்டமாக சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் இந்த காட்சியை உற்சாகமாக கைதட்டி ரசித்தனர். சமூக வலைத்தளங்களின் உதவியால் குழந்தை போல வளர்த்த தங்கள் செல்லக்கிளி கிடைத்தது அதனை வளர்த்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story