உடுமலை அருகே உள்ள ஒட்டுக்குளத்தில் தண்ணீர் அளவு அதிகரித்து கடல்போல் காட்சியளிக்கிறது


உடுமலை அருகே உள்ள ஒட்டுக்குளத்தில் தண்ணீர் அளவு அதிகரித்து கடல்போல் காட்சியளிக்கிறது
x
தினத்தந்தி 15 May 2022 9:39 PM IST (Updated: 15 May 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே உள்ள ஒட்டுக்குளத்தில் தண்ணீர் அளவு அதிகரித்து கடல்போல் காட்சியளிக்கிறது

உடுமலை:
உடுமலை அருகே உள்ள ஒட்டுக்குளத்தில் தண்ணீர் அளவு அதிகரித்து கடல்போல் காட்சியளிக்கிறது.
ஒட்டுக்குளம்
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை வரை உள்ள பகுதிகளில் ஏழுகுளம் என்று அழைக்கப்படும் தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம், அம்மாபட்டிகுளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் வளையபாளையம் குளம் ஆகியவைஉள்ளன. பரம்பிக்குளம்- ஆழியாறுபாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி) திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த குளங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் திறந்து விடும் தண்ணீர், அந்த குளங்களுக்கு எவ்வளவு தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்கான தண்ணீர் அரசாணைப்படி, விவசாயிகளின் தேவையைப்பொறுத்து அந்தந்த காலகட்டத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான 10 மாதத்திற்குள் திறந்து விடப்படும். அதன்படி இந்த குளங்களுக்கு கடந்த ஆண்டுமுதல் அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுவருகிறது.
கடல் போல் காட்சி
இந்த குளங்களில் ஒட்டுக்குளம் உடுமலை நகராட்சி பகுதியை ஒட்டி உள்ளது. இந்த குளத்தின் உயரம் 10 அடி.  இந்த ஒட்டுக்குளத்தின மூலம் 242 ஏக்கர் நிலம்பாசனவசதி பெற்றுவருகிறது. இந்த குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்கிறது. அதனால் குளம் கடல்போல் காட்சியளிக்கிறது. ஆங்காங்கு நீர்க்கோழிகள் தண்ணீரில் மூழ்கிய படி நீந்தியும், தண்ணீர் மேல்பகுதியில் நீந்தியும் வருகின்றன. அதேசமயம் குளத்தில் இருந்து பாசனபகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் செட்டர் பகுதியில் மதுப்பிரியர்கள் உட்கார்ந்து குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை செட்டர் பகுதியில் குளத்திற்குள் போட்டு செல்கின்றனர். அதனால் செட்டர் பகுதியில் காலி மதுபாட்டில்கள் மிதந்து கொண்டுள்ளது.

Next Story