தூத்துக்குடியில் பெண்மீது தாக்குதல்: 2 பேர் கைது
தூத்துக்குடியில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈனமுத்து மகன் பெரியநாயகம் (22). இவரது அப்பாவுக்கு சொந்தமான வீட்டில் ஒரு பெண் ஒத்திக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் பெரியநாயகம் அந்தப் பெண்ணிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறி மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார். இந்த நிலையில் பெரியநாயகம் மற்றும் அவரது உறவினரான லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் மாரிமுத்து (28) ஆகிய 2 பேரும் சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணிடம் வீட்டை காலி செய்வது குறித்து மீண்டும் தகராறு செய்து தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்கு பதிவு செய்து பெரியநாயகம் மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேரையும்கைது செய்தார்.
Related Tags :
Next Story