வேளாண் துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்


வேளாண் துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
x
தினத்தந்தி 15 May 2022 9:53 PM IST (Updated: 15 May 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.

வேளாண் துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.
காலிப்பணியிடங்கள்
காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ரூ.15 லட்சம் செலவில் 60 டன் மின்னணு எடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு மின்னணு எடை மேடையை திறந்து வைத்து பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. வேளாண்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். குறிப்பாக கூடுதல் வேளாண் இயக்குனர், இணை இயக்குனர், உதவி இயக்குனர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
பயிர் காப்பீட்டு தொகை
இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், காரைக்கால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த எடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க இந்த அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக குறுவை நெல் சாகுபடி செய்த காரைக்கால் விவசாயிகளுக்கு பயிர் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை  அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன், மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார், காரைக்கால் விற்பனைக்குழு செயலர் ஜெயந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் புஷ்பராஜ், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story