குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தூய்மைப்பணி
குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது
குத்தாலம்
மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் சன்னதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தெருக்களில் கிடந்த குப்பைகள் மற்றும் செடி-கொடிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றினர். இதனை பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத்தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story