வால்பாறை அக்காமலை எஸ்டேட்டில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது


வால்பாறை அக்காமலை எஸ்டேட்டில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது
x
தினத்தந்தி 15 May 2022 10:16 PM IST (Updated: 15 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அக்காமலை எஸ்டேட்டில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது


வால்பாறை

வால்பாறை அக்காமலை எஸ்டேட் பகுதியில்  புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா கொடியேற்றத்து டன் தொடங்கியது.

 அதைத்தொடர்ந்து நவநாள், சிறப்பு ஜெப வழிபாடு, ஜெபமாலை பக்தி ஆகியவை நடைபெற்றது. 

ஆலய பங்கு குரு மரியஜோசப் தலைமையில் முடீஸ் புனித அந்தோணி யார் ஆலய பங்கு குரு மரியஅந்தோணிசாமி மற்றும் உதவி பங்கு குரு மரியபினிட்டோ ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினார்கள். 

இதையடுத்து புனித அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர் பவனி அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு வழியாக சென்றது. 

பின்னர் ஆலயத்தில் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. 

விழா ஏற்பாடுகளை பங்கு குருக்கள் தலைமையில் அக்காமலை எஸ்டேட் பங்கு மக்கள் செய்திருந்தனர்.


Next Story