தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 15 May 2022 10:36 PM IST (Updated: 15 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன் மகன் சங்கர் என்கிற சன் கதிரவன் (வயது 40). இவர் கடந்த 11-10-2021 அன்று திருக்கோவிலூர் தாலுகா மண்டபத்தை சேர்ந்த சேட்டு என்பவரது வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்றார். இதுதொடர்பாக திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

இதனால் இவரது தொடர் குற்ற செயல்களை தடுக்கும்பொருட்டு சங்கரை குண்டர் தடுப்பு  சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.  இதைத்தொடர்ந்து சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும். அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story