நச்சலூரில், 18 குண்டுகள் முழங்க ராணுவ அதிகாரி உடல் நல்லடைக்கம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 May 2022 10:37 PM IST (Updated: 15 May 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

நச்சலூரில், 18 குண்டுகள் முழங்க ராணுவ அதிகாரி உடல் நல்லடைக்கம் செய்யப்பட்டது.

நச்சலூர், 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 57). இவர் இந்திய இராணுவத்தில் கடந்த 1989-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து கொல்கத்தாவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தநிலையில் பதவி உயர்வு பெற்று கடந்த மே 1-ந்தேதி குஜராத் மாநிலத்தில் மெயின் சிட்டி எல்லை பாதுகாப்பு படையின் அலுவலக பணியில் உதவி துணை ஆய்வாளராக அங்கு பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நடைப்பயிற்சி சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த சக ராணுவ வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் இறந்து விட்டார் என கூறியுள்ளனர். 
பிறகு தனி ஹெலிஹாப்டரில் அவரின் உடல் கோயம்புத்தூர் வரை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான நச்சலூருக்கு கொண்டு வரப்பட்டு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் நச்சலூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணுவ எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஜோசப் தேவசியா முன்னிலையில் ராணுவ வீரர்கள் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதன்பிறகு 18 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் வாசுதேவன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த வாசுதேவனுக்கு பரிமளா (45) என்ற மனைவியும், சோனாலி (24), ஆர்த்தி (21) என்ற 2 மகள்களும் உள்ளனர்

Next Story