கிணத்துக்கடவு பகுதியில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது இதனால் முருங்கைக்காய் பறிக்கப்படாமல் மரத்தில் காய்ந்து தொங்குகிறது
கிணத்துக்கடவு பகுதியில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது இதனால் முருங்கைக்காய் பறிக்கப்படாமல் மரத்தில் காய்ந்து தொங்குகிறது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் முருங்கைக்காய் பறிக்கப்படாமல் மரத்தில் காய்ந்து தொங்குகிறது.
முருங்கைக்காய் சாகுபடி
கிணத்துக்கடவு பகுதிகளில் மானாவாரி, மற்றும் தரிசு நிலங்க ளில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் பச்சை மிளகாய், வெண்டைக்காய், கத்திரிக்காய், புடலங்காய், முருங்கைக் காய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. எனவே கிணத்துக்கடவு பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை வீழ்ச்சி
அது போல் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் முருங்கை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
எனவே அங்கு முருங்கைக்காய் அதிக அளவு உற்பத்தி ஆகிறது.
ஆனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் முருங்கைக் காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.
இதனால் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.13 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. மேலும் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் முருங்ைகக்காய் குறைந்த விலைக்கே ஏலம் போகிறது.
எனவே கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், தங்களின் தோட்டங்களில் உள்ள முருங்கை மரங்களில் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
இதன் காரணமாக முருங்கைக்காய்கள் பறிக்கப்படாமல் மரத்தில் காய்ந்து தொங்குகிறது.
விவசாயிகளுக்கு நஷ்டம்
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், முருங்கைக்காய் விலை மிகவும் குறைந்து விட்டது. இதனால் முருங்கைக்காய்களை பறிக்க கூலி கொடுக்க கூட கட்டுப்படியாவது இல்லை.
விலை கிடைக் காததால் நஷ்டத்தை தவிர்க்க முருங்கைக் காய்களை பறிக்காமல் மரத்தில் அப்படியே விட்டு விட்டோம் என்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், முகூர்த்த சீசன் இல்லாததால் தக்காளியை தவிர மற்ற அனைத்து காய்கறிகளும் விலையும் கடந்த சில வாரங்களாக கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.
அது போல் முருங்கைக்காய் விலை யும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை ஆகிறது. மேலும் முருங்கைக்காய் வரத்து அதிகம் உள்ளதால் குறைந்த விலையே கிடைக்கிறது.
முகூர்த்த சீசன் வரும் போது முருங்கைக்காய் விலை மீண்டும் அதிகரிக்கும் என்றனர்.
Related Tags :
Next Story