லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வங்கி மேலாளர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 May 2022 5:14 PM GMT (Updated: 15 May 2022 5:14 PM GMT)

குளித்தலையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வங்கி மேலாளர் பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை, 
வங்கி மேலாளர்
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). இவர் தனியார் வங்கி ஒன்றில் ஏரியா மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனது தாய்மாமா அம்மையப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். 
பின்னர் மீண்டும் முசிறியில் இருந்து  மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை பரிசல்துறை சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே சென்ற லாரியின் டிரைவர் எந்தவித செய்கையும் காட்டாமல் லாரியை திடீரென திருப்பியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. 
பலி
இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இந்த விபத்து குறித்து ரஞ்சித்குமாரின் தாய்மாமா அம்மையப்பன் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் பரித்திக் கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story