பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.


பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.
x
தினத்தந்தி 15 May 2022 10:47 PM IST (Updated: 15 May 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.


பொள்ளாச்சி

பொள்ளாச்சி  உடுமலை ரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.

குடிநீர் குழாயில் கசிவு

பொள்ளாச்சியில் இருந்து  பழனி, மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உடுமலை ரோடு உள்ளது. 

மேலும் அந்த சாலையில் கோவை மற்றும் கேரளா வாகனங்களும் செல்கின்றன. இதனால் அந்த ரோட்டில் தினமும் 30 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 

எனவே எப்போதும் வாகன போக்குவரத்து உள்ள உடுமலை சாலை மரப்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகி வந்தது. 

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித் தும் கசிவை சரிசெய்ய வில்லை.

அடிக்கடி விபத்து

இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்ய கோரி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் சரி செய்த னர். 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

பொள்ளாச்சி நகராட்சி ஆசிரியர் காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து உடுமலை சாலை வழியாக குழாய் அமைத்து மரப்பேட்டை, பொட்டுமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

இதில் மரப்பேட்டை பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. 

பொதுமக்கள் போராட்டம்

அதை சரி செய்யாமல் விட்டதால் தொடர்ந்து தண்ணீர் கசிந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதில் செடிகள் நட்டு  பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

இது குறித்து 'தினத்தந்தி' யில் செய்தி வெளியானதும் நகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்தனர். 

இதற்காக 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக் கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

மேலும் குடிநீர் குழாயை சீரமைக்க சாலையின் நடுவே தோண்டிய பள்ளத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story