பவுதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 May 2022 10:49 PM IST (Updated: 15 May 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

பவுதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தோகைமலை, 
தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி நாவலக்காப்பட்டியில் பிரசித்தி பெற்ற பவுதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செல்வ கணபதி, பாலமுருகன், காளியம்மன், கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து யாகசாலையில் வைத்தனர். பின்னர் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீைர சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். 
பின்னர் பவுதியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஊர் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story