வடுவூர் கோதண்டராமர் கோவிலில் தேர்த்திருவிழா


வடுவூர் கோதண்டராமர் கோவிலில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 16 May 2022 12:00 AM IST (Updated: 15 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

நரசிம்ம ஜெயந்தியையொட்டி வடுவூர் கோதண்டராமர் கோவிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது.

வடுவூர்:
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் அகோபில மடத்தில் தனி சன்னதியில் லஷ்மி நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.இந்த கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வந்தது. தினமும் சூரிய பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து தேர்த்திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக மூலவர் லட்சுமி நரசிம்மர் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.அதேபோல உற்சவர் லட்சுமி நரசிம்மரை தேரில் எழுந்தருள செய்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வர செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story