விக்கிரவாண்டியில் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்


விக்கிரவாண்டியில் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 15 May 2022 11:05 PM IST (Updated: 15 May 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.


விக்கிரவாண்டி,

குடும்ப அட்டையில் திருத்தம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பொது வினியோக திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாதந்தோறும் தாலுகாக்களில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  

 அதன்படி, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு தாசில்தார் இளவரசன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது.

 முகாமில், வட்ட வழங்கல் அலுவலர் வேலு, மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், தயாநிதி, இளநிலை உதவியாளர் பிரகாஷ், வட்ட பொறியாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story