நொய்யல் பகுதியில் கனமழை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 May 2022 11:13 PM IST (Updated: 15 May 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் பகுதியில் கனமழை பெய்தது.

நொய்யல், 
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், குப்பம், குந்தாணிபாளையம், நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் வெளியூர்களுக்கு சென்று திரும்பியவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள் அவதிப்பட்டனர். தொடர்ந்து கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக கிராமப்புறங்களில் வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. 

Next Story