பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கோரி நகராட்சி ஆணையாளர் மனு
பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய கோரி நகராட்சி ஆணையாளர் மனு அளித்தார்
சிவகங்கை,
பணியிடை நீக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்று சிவகங்கை நகராட்சி ஆணையாளர் முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை நகராட்சி ஆணையராக கடந்த 24.11.2021 முதல் பணியாற்றி வந்தேன். கடந்த 13-ந் தேதி மாலை நகராட்சி நிர்வாக இயக்குனரால் காணொலி மூலம் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் கோரிய விவரங்களை தெரிவித்து வந்தேன். தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட சில விவரங்களுக்கு நகராட்சி பொறியாளரிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினேன். அப் போது, நகராட்சி நிர்வாக இயக்குனர் என்னை விரும்ப தகாத வார்த்தைகளால் கண்டித்தார். உரிய அலுவலர்களிடம் கேட்டு தகவல் தருகிறேன் என கூறிய பிறகும் இதுபோன்று பேசுவது சரியல்ல என முறையிட்டேன். என்னை பணியிடை நீக்கம் செய்துள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குனர் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களை மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் பேசி வருகிறார். எனவே அதிகார வரம்பு மீறலில் ஈடுபடும் நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி என்னுடைய பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story