போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சியது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் வீட்டை பார்வையிட்ட பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோடும் தெற்கு வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் திருவாரூரில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்துக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. தெற்குவீதி என்ற பெயரே தொடரும் என அந்த துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது. அவரது மகன் பா.ஜ.க. இளைஞரணி பொறுப்பில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநில பார்வையாளர் பேட்டை சிவா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story