பால் வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது


பால் வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 May 2022 12:00 AM IST (Updated: 15 May 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே பால் வியாபாரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டூர்ஞ
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழ பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (வயது65).இவர் இருசக்கர வாகனத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (25). இவர் காசிநாதன்  பால் விற்பைன செய்யும் பகுதியில் பால் விற்பனை செய்து வந்ததுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று காசிநாதன் காமாட்சி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜெயகாந்தன் அவரை வழிமறித்து கம்பியால் தாக்கி உள்ளார் இதில் படுகாயமடைந்த காசிநாதன் மன்னார்குடி  அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து ஜெயகாந்தனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story