தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 May 2022 12:00 AM IST (Updated: 15 May 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த மக்கள் குறைகள் தொடர்பாக செய்திகள் வருமாறு:-

வேகத்தடை வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி திருமணஞ்சேரி கீழத்தெரு மாரியம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி வேகத்தடை இல்லாததால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?.                            -பொதுமக்கள், திருமணஞ்சேரி.

பாலம் சீரமைக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதி திருவாஞ்சியம் கிராமத்தில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பாலத்தை தாங்கிப்பிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அந்த பாலத்தின் வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?.                   
-பொதுமக்கள், திருவாஞ்சியம்.

Next Story