புதுக்கோட்டையில் போதை ஊசி விற்க முயன்ற 5 பேர் கைது மாத்திரைகள் பறிமுதல்
புதுக்கோட்டையில் போதை மாத்திரை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
போதை ஊசி
புதுக்கோட்டை டவுன், திருக்கோகர்ணம், கணேஷ்நகர் பகுதியில் போதை ஊசி விற்கும் கும்பல் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஓரளவுக்கு போதை ஊசி விற்பனை கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் போதை ஊசி விற்பனை தலை தூக்க தொடங்கி உள்ளது.
இதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் போதை ஊசி விற்பதற்காக மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 5 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர். இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மேகநாதன் (வயது 44), வீரமணிகண்டன் (28), முகமது ஆசிப் (23), சூர்யா (23), அப்துல்லா (32) ஆகியோர் ஆவர்.
மாத்திரைகள் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து 180-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். அவர்கள் மாத்திரையை ஊசியில் ஏற்றி பயன்படுத்தவும், விற்கவும் இருந்தது தெரியவந்தது.
மேலும் ஒரு மருந்தகத்தில் அந்த மாத்திரைகளை அவர்கள் மொத்தமாக வாங்கியது தெரிந்தது. இதனால் மாத்திரையை விற்ற மருந்தகத்தின் உரிமையாளர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story