விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், துணை செயலாளர் கிருஷ்ணகுமார், தஞ்சை மாவட்ட நெறியாளர் கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். திருமாவளவன் பிறந்த நாளை அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றி வைத்து கொண்டாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story