வாடிப்பட்டி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது
வாடிப்பட்டி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதி்க்கப்பட்டது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதி்க்கப்பட்டது.
லாரி கவிழ்ந்தது
மதுரையில் இருந்து கரூருக்கு கிரானைட் குவாரியில் கல் அறுக்கும் ராட்சத எந்திரத்தை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி வாடிப்பட்டி அருகே நகரியில் 4 வழிச்சாலை அருகே அய்யங்கோட்டை சேவை சாலையில் சென்றது.
அப்போது திடீரென்று நடுரோட்டில் லாரி, எந்திரத்துடன் கவிழ்ந்தது. நல்லவேளை அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வரவில்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த எந்திரத்தையும், லாரியையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மீட்பு வாகனங்கள் மதுரை-திண்டுக்கல் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story