கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 May 2022 12:22 AM IST (Updated: 16 May 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி வாலிபர் பலியானார்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தினகரன் (வயது28). ராமேசுவரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் மண்டபம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது மெய்யம்புளி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த இவர் திடீரென வலதுபுறமாக திரும்பி உள்ளார்.அப்போது ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தினகரன் படுகாயமடைந்து கீழே விழுந்தார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து தங்கச்சிமடம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் ராஜ கம்பீரத்தை சேர்ந்த கார் டிரைவர் ஆசிப் முகமது (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story