தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
புதிய மின்கம்பம் வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதி வீரராகவபுரம் அருள்நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும்ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருவிடைமருதூர்.
வளைந்த நிலையில் மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தெற்கு காளியம்மன் கோவில் தெரு சாலையில் இரும்பு மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மின்கம்பம் தற்போது நன்கு வளைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. மேலும், மின்கம்பம் வளைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வளைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
Related Tags :
Next Story