திண்டுக்கல், நத்தத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திண்டுக்கல், நத்தத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல், நத்தத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி கலந்துகொண்டனர்.
சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே நேற்று நடந்தது. இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா அனைவரையும் வரவேற்றார். மேயர் இளமதி, தி.மு.க. ஒன்றிய தலைவர் ராஜா, செயலாளர் நெடுஞ்செழியன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்புரையாற்றி பேசியதாவது:-
யாருக்கும் தகுதி இல்லை
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் பல்வேறு சாதனைகளை தி.மு.க. அரசு செய்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு 5 கல்லூரிகள் அமைப்பது, காவிரியில் ரூ.100 கோடியில் கிணறுகள் அமைத்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கூறலாம். தேர்தல் வாக்குறுதிகள் படி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் தகுதி இல்லை. தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டால் இனி இளைஞர்களுக்கு வேலை வீடு தேடி வரும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்திய திட்டங்களால் தற்போது திண்டுக்கல் மு.க.ஸ்டாலின் கோட்டையாக மாறி உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாணவர் அணி துணை அமைப்பாளர் சூசை ராபர்ட், நகர துணை செயலாளர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நத்தம், வடமதுரை
இதேபோல் நத்தத்தில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்துக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். ேவலுசாமி எம்.பி., தி.மு.க. துணை ெபாதுச்ெசயலாளர் சுப்புலட்சுமி ெஜகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிசாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் முத்துகுமார் சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், பேரூராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாத்திபவுர், ராஜேஸ்வரி அழகர்சாமி, ஒன்றிய துணை செயலாளர் குப்புச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வடமதுரை கலைஞர் திடலில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் தலைமை தாங்கினார். வடமதுரை நகர செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன், அய்யலூர் நகர செயலாளர் கருப்பன், வடமதுரை பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story