பாகவத மேளா நாடகம் விடிய, விடிய நடந்தது
பாகவத மேளா நாடகம் விடிய, விடிய நடந்தது
மெலட்டூர்:
பாபநாசம் தாலுகா மெலட்டூரில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோவில் அருகே உள்ள நல்லி கலையரங்கத்தில், பாகவத மேளா நாட்டிய நாடகம் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிக்கு ருக்மணி கல்யாணம், ஆஞ்சநேய உற்சவத்துடன் பாகவத மேளா நிறைவு பெற்றது. இதேபோல் சாலியமங்கலத்தில் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி பாகவத மேளா நாட்டிய நாடகம் விடிய, விடிய நடந்தது. தொடர்ந்து மங்கள இசையுடன் பிரதிஷ்டை ஆராதனை, இரவு 7 மணிக்கு சீனிவாச பெருமாள் கருடசேவை ஆகியவை நடைபெற்றது. நேற்று மாலை சமாஜத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டமும், ருக்மணி பரிணயம் பாகவத மேள நாட்டிய நாடகமும் நடந்தது. விழாவில் இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு ருக்மணி கல்யாணமும், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story