பேரையூர், டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு


பேரையூர், டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2022 7:35 PM GMT (Updated: 15 May 2022 7:35 PM GMT)

பேரையூர்,டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பேரையூர்,

பேரையூர்,டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

மதுரை மாவட்டம் பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.அவர் பேரையூர், டி.கல்லுப்பட்டியில் உள்ள வளம் மீட்பு பூங்காவுக்கு சென்று அங்கு கலவை உரம், மண்புழு உரம், எப்படி தயார் செய்யப்படுகிறது, என்பதை பார்வையிட்டார். 
நாளொன்றுக்கு எவ்வளவு உரங்கள் தயார் செய்யப்படுகிறது, உரங்கள் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்று கேட்டறிந்தார். 2 பேரூராட்சிகளிலும் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகளை ஆணையாளர் செல்வராஜ் நட்டு வைத்தார். 
இதை தொடர்ந்து பேரையூர் பஸ் நிலையத்தில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணியையும், பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம், டி.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு சுகாதார வளாகங்கள் சுத்தமாக உள்ளதா என்றும், பயனாளர்களுக்கு அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.

ேபாதிய குடிநீர் வழங்க உத்தரவு

சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் டி. கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் குறைந்த அளவு வருகிறது என்று பேரூராட்சி தலைவர் முத்துக்கணேசன் ஆணையாளர் செல்வராஜிடம் புகார் கூறினார்.அதற்கு ஆணையாளர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு போதிய அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இந்த ஆய்வின்போது செயற் பொறியாளர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பேரையூர் பேரூராட்சி தலைவர் கே. கே.குருசாமி, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் முத்து கணேசன், டி.கல்லுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் பாண்டிமுருகன், பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயதாரா, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பசீர் அகமது, மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், பணியாளர்கள் உடன் சென்றனர்.

Next Story