சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு


சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 16 May 2022 1:12 AM IST (Updated: 16 May 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்குப் பஜார் தெருவில் பொதுமக்கள் குப்பைகளை சேகரித்து வந்து சாலையோரம் கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை நாய்கள், பன்றிகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. வாகனங்கள் செல்லும்போது காற்றில் குப்பைகள் பறந்து நாலாபுறமும் சிதறி கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம் இ்ங்கு ஒரு குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story