மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் சாவு


மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 16 May 2022 1:16 AM IST (Updated: 16 May 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

ேமலூர் அருகே மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலியானது. இதில் மின்சாரம் தாக்கியதால் விவசாயி ஒருவரும் படுகாயம் அடைந்தார்.

மேலூர்,

ேமலூர் அருகே மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலியானது. இதில் மின்சாரம் தாக்கியதால் விவசாயி ஒருவரும் படுகாயம் அடைந்தார்.

4 ஆடுகள் சாவு

மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தின் அருகில் உள்ளது வலையங்குளம். இங்கு கண்ணன் என்பவரது ஆடுகள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென வீசிய காற்றினால் மின்சார கம்பி அறுந்து விழுந்தது. கீழே கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி அவருடைய 2 ஆடுகள் உயிரிழந்தன.
கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. விவசாயி. இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள வயலில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் போது உயர்மின் அழுத்த மின்வயர் திடீரென அறுந்து விழுந்ததால் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகள் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

விவசாயி படுகாயம்

இதனை காப்பாற்ற சென்ற விவசாயியான ஆட்டின் உரிமையாளர் சுப்பையாவை மின்சாரம் தாக்கியதில் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

Next Story