பிளாஞ்சேரி சரபசூலினி அம்மனுக்கு நவசண்டி ஹோமம்


பிளாஞ்சேரி சரபசூலினி அம்மனுக்கு நவசண்டி ஹோமம்
x
தினத்தந்தி 16 May 2022 1:17 AM IST (Updated: 16 May 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

பிளாஞ்சேரி சரபசூலினி அம்மனுக்கு நவசண்டி ஹோமம்

திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் பிளாஞ்சேரியில் பிரசித்தி பெற்ற  கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டுள்ள சரப சூலினி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி  நவசண்டி ஹோமம், முதல் கால பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து  கடம் புறப்பாடு நடந்து சரப சூலினி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. சரபசூலினி உபாசகர் நாகராஜ் சிவாச்சாரியார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு பூஜைகளை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் மற்றும்  ராஜேஷ் சிவாச்சாரியார், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story