திராவகம் குடித்த பெண் சாவு


திராவகம் குடித்த பெண் சாவு
x
தினத்தந்தி 15 May 2022 7:59 PM GMT (Updated: 2022-05-16T01:29:42+05:30)

மதுரையில் திராவகம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

மதுரை,

மதுரை அய்யர்பங்களா எழில்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா (வயது 38). குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுகன்யா திராவகத்தை (ஆசிட்) குடித்தார். மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story