ராஜபாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள்


ராஜபாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள்
x

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குடிநீர் வினியோகம் பணிகள், உரம் தயாரிக்கும் இடங்கள், திட்டப்பணிகள், கோடைக்குடிநீர் தேக்கத்தில் உள்ள குடிநீர் வினியோகம் தொட்டி சுத்திகரிப்பு, மிதவேக மணல் வடிப்பான், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தார் சாலைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மங்காபுரத்தில் உள்ள 5 மெட்ரிக்டன் திறனுடைய மக்கும் குப்பைகளில் நுண் உரம் செயலாக்கம் மையம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவனந்தபுரத்தில் உள்ள ஊருணியை புனரமைத்து நடைபாதை அமைத்து சுற்று சுவர் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார். வேட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள கலவை உரக்கிடங்கில் மக்காத குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்கும் மையத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது திருநேல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலெட்சுமி, திருநெல்வேலி மண்டல செயற் பொறியாளர் சேர்மக்கனி, நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமலிங்கம், நகரமைப்பு அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சுதாகரன், ஆரியங்காவு, பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story