செல்போன் மோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபர்; போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்


செல்போன் மோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபர்; போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 16 May 2022 1:41 AM IST (Updated: 16 May 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் மோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு தென்காசியில் சுற்றித் திரிந்த வாலிபரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி:
தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மன நலம் சரியில்லாமல் இருந்தது தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கற்பகராஜா, செல்வி ஆகியோர் அந்த இளைஞரை தென்காசி அருகே உள்ள வடகரையில் இருக்கும் அன்பு இல்லம் என்ற ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் அந்த இளைஞரின் படத்தை சமூக வலைத்தளங்களில் போலீசார் பதிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு தம்பதியினர் அது தங்களது மகன் என்று தென்காசி போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். 
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெற்றோரிடம் விசாரித்தபோது அவர் சிறுவயதில் இருந்தே செல்போன் அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்று பெற்றோர் கூறினர். எனவே தென்காசி போலீஸ் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி அந்த வாலிபரை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Next Story