மதுரை: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை
மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியில் வசித்து வந்தவர் முகம்மது காசிம் (வயது 58). இவர் காச நோயால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்டின் பட்டி அரசு நுரையீரல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த சில நாட்களாக மனவிரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் தனது வார்டுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் கழிவறைக்கு சென்று பார்த்தபோது முகமது காசிம் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆஸ்டின் பட்டி போலீசார் விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முகம்மது காசிம் தூக்குபோட்டு தற்கொலை செய்ய காரணம் என்ன ? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story