ஓமலூர் அருகே ஆற்று வெள்ளத்தில் தனியார் கல்லூரி பஸ் சிக்கியது
ஓமலூர் அருகே ஆற்று வெள்ளத்தில் தனியார் கல்லூரி பஸ் சிக்கியது.
ஓமலூர்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் பெய்து வரும் மழை காரணமாக சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஓமலூர் அருகே உள்ள சக்கரைசெட்டிப்பட்டி நாலுகால் பாலம் பகுதியில் சரபங்கா ஆற்றை தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் ஒன்று கடக்க முயன்றது. அந்த பஸ் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. பஸ்சில் டிரைவர் மட்டுமே இருந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டிராக்டர் மூலம் கயிறு கட்டி தனியார் கல்லூரி பஸ்சை மீட்டனர். ஆற்று வெள்ளத்தில் தனியார் கல்லூரி பஸ் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story