மாயமான முதியவர் சடலமாக மீட்பு
மாயமான முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் தில்லை நகரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60). இவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காமராஜ் நேற்று திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது அவர்களது தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story