கர்நாடகத்தில் மதராசா பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும்; பிரமோத் முத்தாலிக் வலியுறுத்தல்
கர்நாடகத்தில் மதராசா பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரமோத் முத்தாலிக் வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால், மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை உள்ளிட்ட விவகாரங்களை ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் எழுப்பி வருகிறார். இந்த நிலையில், கர்நாடகத்தில் மதராசா பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற புதிய பிரச்சினையை பிரமோத் முத்தாலிக் கையில் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஏராளமான மதராசா பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு தேசிய கீதம் பாட அனுமதி அளிப்பதில்லை. மதராசா பள்ளிகளில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டிலேயே மதராசா பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் மதராசா பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும். மதராசா பள்ளிகளில் படிப்பவர்கள் பயங்கரவாதிகளாக உருவெடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. எனவே தேசிய கீதத்தை புறக்கணிக்கும் மதராசா பள்ளிகளுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story