திருமண நாளில் மனைவியை கொன்ற வாலிபர்


திருமண நாளில் மனைவியை கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 16 May 2022 2:36 AM IST (Updated: 16 May 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

யாதகிரி அருகே திருமண நாளில் மனைவியை கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

யாதகிரி:

யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகா கோபாலபுரா கிராமத்தை சேர்ந்தவர் பீமராயா (வயது 26). இவரது மனைவி பார்வதி (24). இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு (2021) மே மாதம் 14-ந் தேதி திருமணம் நடந்து இருந்தது. திருமணத்திற்கு பின்னர் பீமராயாவும், பார்வதியும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறும் ஏற்பட்டு வந்து உள்ளது. இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோபாலபுரா கிராமத்தில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள பீமராயாவும், பார்வதியும் பெங்களூருவில் இருந்து வந்து இருந்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை 2 பேரும் கொண்டாடினர். இதன்பின்னர் பீமராயாவுக்கும், பார்வதிக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பீமராயா, பார்வதியை கழுத்தை நெரித்து கொன்று, உடலை தூக்கில் தொங்கவிட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து குருமித்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பீமராயாவை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story