கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 16 May 2022 2:39 AM IST (Updated: 16 May 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

மீன்சுருட்டி, 
கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் 45-ம் ஆண்டு பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணியளவில் கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாலை 4.30 மணியளவில் பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கிரிவலம் கயிலாய வாத்தியங்களுடன் கோவிலில் தொடங்கி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இரவு 7 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. கிரிவலத்தில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Next Story