பொதுமக்களிடம் குறைகளை கேட்க சைக்கிளில் ரோந்து செல்லும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
பொதுமக்களிடம் குறைகளை கேட்க பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைக்கிளில் ரோந்து செல்கிறார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தினமும் அதிகாலையில் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து வருவது அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தையும், இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தினமும் அன்னதானப்பட்டி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி பைபாஸ் வரை அவர் காலை 5 மணியில் இ்ருந்து 8 மணி வரை சுற்று வட்டார பகுதிகளில் தெருத்தெருவாக சைக்கிளில் ரோந்து சுற்றி வருகிறார். இதனால் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்லும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் அளித்து வருகிறார். இதனால் அதிகாலையில் நடைபயிற்சி செல்லும் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு நிம்மதியாக செல்ல முடிகிறது. தினமும் சைக்கிளில் ரோந்து சென்று குறைகள் கேட்டறியும் இன்ஸ்பெக்டருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.