ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வின் பேத்தி சாவு
ஜி.டி.தேவேகவுடாவின் பேத்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளாள்.
மைசூரு:
மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜி.டி.தேவேகவுடா. ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர். இவரது மகன் ஜி.டி. ஹரிஷ். இவருக்கு கவுரி(வயது 3) என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை கவுரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து குழந்தை கவுரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று கவுரி பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் ஜி.டி.தேவேகவுடாவின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Related Tags :
Next Story