கருப்பூர் சுங்கச்சாவடியில் அரசு பஸ்சுக்கு அனுமதி மறுப்பு


கருப்பூர் சுங்கச்சாவடியில் அரசு பஸ்சுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 16 May 2022 2:57 AM IST (Updated: 16 May 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

கருப்பூர் சுங்கச்சாவடியில் அரசு பஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பூர்:

தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் சேலம் அருகே கருப்பூர் சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது பஸ்சின் பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால், பஸ் சேலத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாற்று பஸ் மூலம் அவர்கள் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


Next Story