தடைக்காலம் அமலில் உள்ளதால் வரத்து குறைந்தது: ஈரோட்டில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு; வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை


தடைக்காலம் அமலில் உள்ளதால் வரத்து குறைந்தது: ஈரோட்டில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு; வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை
x
தினத்தந்தி 16 May 2022 3:01 AM IST (Updated: 16 May 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஈரோட்டிற்கு மீன்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900-க்கு விற்பனை ஆனது.

ஈரோடு
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஈரோட்டிற்கு மீன்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900-க்கு விற்பனை ஆனது.
மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக மீன்களின் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு கடல் மீன்கள் விற்பனை செய்யப்படுவதால் மீன் பிரியர்கள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
விலை உயர்வு
கடந்த மாதம் இந்த மார்க்கெட்டுக்கு தினமும் 15 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன. ஆனால் தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன் வரத்து பாதியாக குறைந்துள்ளது. நேற்று கேரளா மாநிலத்தில் இருந்து மட்டும் வெறும் 7 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் மீன்களின் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.750-க்கு விற்பனை ஆன வஞ்சிரம் மீன் மேலும் ரூ.150 விலை கூடி நேற்று ஒரு கிலோ ரூ.900-க்கு விற்பனை ஆனது. நேற்று ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-
கொடுவா -ரூ.450, அயிலை-ரூ.250, பாறை - ரூ.450, சங்கரா - ரூ.350, விளா -ரூ.450, இறால் - ரூ.500, மத்தி - ரூ.200, நண்டு -ரூ.400, திருக்கை- ரூ.300, சீலா - ரூ.400, முரல் - ரூ.350. இதேபோல் நேற்று இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

Next Story