கோபி பனந்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்
கோபி பனந்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தாிசனம் செய்தனா்.
கடத்தூர்
கோபி வாய்க்கால் ரோடு பகுதியில் பிரசித்தி பெற்ற பனந்தூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 14-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பஞ்சகாவ்யம், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பூர்ணாகுதி நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கோவில் கும்பாபிஷேகம் காலை 7 மணி அளவில் நடந்தது. அப்போது சிவாச்சாரியார்கள் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
Related Tags :
Next Story