சத்தியமங்கலம் அருகே ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் லாரி மோதியது; டிரைவர்- கிளீனர் உயிர் தப்பினர்
சத்தியமங்கலம் அருகே ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் லாரி மோதியது. இந்த விபத்தில் டிரைவர்- கிளீனர் உயிர் தப்பினர்.
சத்தியமங்கலம்
நாமக்கல்லில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு முட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த கோவிந்தராஜன் ஓட்டினார். கிளீனராக ரித்தீஷ் என்பவர் இருந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்க், முகப்பு பகுதி ஆகியவை சேதமடைந்தது. லாரி கவிழாமல் அப்படியே நின்றது. இதனால் டிரைவர், கிளீனர் காயமின்றி உயிர் தப்பினார்கள். எனினும் இந்த விபத்தில் லாரியில் இருந்து நூற்றுக்கணக்கான முட்டைகள் கீழே விழுந்து நாசம் அடைந்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story