காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,661 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,661 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 May 2022 4:32 AM IST (Updated: 16 May 2022 4:32 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,661 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,661 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணைக்கு கடந்த 12-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 554 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்தது. அதன்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 661 கனஅடி தண்ணீர் வந்தது.

நீர்மட்டம் உயர வாய்ப்பு

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 108.14 அடியாக உள்ளது.

அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

Next Story